Dr. J. Jayalalitha

காந்தியடிகள் 143வது பிறந்த நாள் விழா:தமிழக கவர்னர், முதல்வர் மரியாதை
சென்னை:காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று, அவரது சிலைக்கு தமிழக கவர்னர் ரோசையா மற்றும் முதல்வர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின், 143வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, தமிழக கவர்னர் ரோசையா மற்றம் முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில், காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை, ராணி மேரி கல்லூரி, பிரம்ம குமாரி அமைப்பு, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணைந்து, தேசபக்திப் பாடல்கள் பாடினர்.

காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய கவர்னர், சமூக ஆர்வலர்கள் பாடிய தேசபக்திப் பாடல்களை, ஐந்து நிமிடம் அமர்ந்து கேட்டார்.காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு, தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழன், சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்தார். இப்பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். காந்திய சிந்தனை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் அட்டைகளை, சைக்கிளில் பார்வைக்கு வைத்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் செந்தமிழன், சின்னையா, ரமணா, கோகுல இந்திரா, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Source & Thanks : dinamalar

போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற முதல்வர் வேண்டுகோள்
சென்னை: “போட்டியாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சியினர், உடனடியாக தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற வேண்டும்’ என, முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா எழுதிய கடிதம்: ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் மாநகராட்சி மேயர் வரை, உள்ளாட்சி தேர்தல் என்பது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா.

மாநில அரசின் மக்கள் நலப் பணிகள் அனைத்தும், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அதுமட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமும், தொட்டிலும் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் தான்.மக்கள் தொண்டாற்ற விரும்புவோருக்கு, ஜனநாயக பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆரம்பப் பள்ளி, உள்ளாட்சி அமைப்புகள். எனவே, இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கண்ணியத்தோடும், கட்டுப்பாடோடும், மக்கள் தொண்டு எனும் கடமை உணர்வோடும் நடைபெறுவது மிகவும் அவசியம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சி பதவிகளுக்கு, வேட்பாளர்களை நிறுத்தும் போது, கட்சியினர் அனைவரையும் மனதில் வைத்து தான் வேட்பாளர் தேர்வு, ஆட்சி மன்றக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கட்சியினர் அனைவரையுமே மக்கள் பணியில் ஈடுபடுத்தி, உயர்ந்த பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இருப்பினும், பலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைத் தர இயலவில்லை. வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், அவர்கள் கட்சியில் குறைத்து மதிப்பிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள் அல்ல. அனைவருமே கட்சியின் இதயம் போன்றவர்கள்; கண்களைப் போன்றவர்கள்.உங்கள் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன்.

கட்சி வளர்ச்சிக்காக, தேர்தல்களில் கட்சி வெற்றிக்காக, தன்னலம் கருதாது நீங்கள் ஆற்றும் பணிகளை, நன்கு அறிந்திருக்கிறேன். காலம் வரும் போது, உங்கள் எதிர்பார்ப்புகளையும், மக்கள் தொண்டாற்றும் ஏக்கத்தையும் உரிய வகையில் நிறைவேற்ற, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.தி.மு.க., ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, கள்ள ஓட்டுகள் மூலமும், ஓட்டுச் சாவடிகளை மட்டுமல்லாமல், ஓட்டு எண்ணப்பட்ட இடங்களையும் தி.மு.க.,வினர் கைப்பற்றி, அராஜகம் செய்த கோர சம்பவங்களை, தமிழக மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.

தமிழக வாக்காளர்களின் பேராதரவு, நம் கட்சிக்கு இருக்கிறது. வெற்றி மாலையை கட்சியின் தோள்களில் சூட்டி அழகு பார்க்க, பெருமை கொள்ள தமிழகம் காத்திருக்கிறது. நாம் தான் கண்ணியத்தோடு, அந்த வெற்றி மாலையை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணியைச் செய்ய வேண்டும். அதற்கு, அனைவருடைய ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.நமக்குள் போட்டிகளைத் தவிர்த்து, கட்சியின் வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, ஒற்றுமையாய் தேர்தல் பணியாற்றுங்கள். போட்டியாக மனு தாக்கல் செய்துள்ள கட்சியினர், உடனடியாக தங்கள் மனுக்களை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்; ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 16 பேர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும், வனத் துறை அமைச்சருமான கே.டி.பச்சைமால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், எம்.எல்.ஏ., மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா,

கரூர் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பாசுந்தரம், எம்.எல்.ஏ., அரியலூர் மாவட்ட செயலாளர் துரை மணிவேல், எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் எஸ்.காமராஜ், எம்.எல்.ஏ., ப.குமார் எம்.பி., ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Source & Thanks : maalaimalar

9 மாநகராட்சிகளில் ஜெயலலிதா பிரசாரம்; அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சிப் பதவி இடங்கள் உள்ளன.

இந்த பதவி இடங்களில் இருப்பவர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது.

நாளை (வியாழன்) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் மனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. முதலில் மனு தாக்கல் மிகவும் மந்தமாக இருந்தது. முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த பிறகே, மனு தாக்கலில் சூடு பிடித்தது. நேற்று மாலை வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 391 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்றும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மனு செய்தனர். காங்கிரஸ் உள்பட சில கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை தான் மனு செய்ய உள்ளனர்.

3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் நாளை மறு நாள் (30-ந்தேதி)

பரிசீலனை செய்யப்படும்.

தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ந் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்.

3-ந் தேதி மாலை ஒவ்வொரு உள்ளாட்சி பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு பிரசாரம் சூடு பிடிக்கும்.

தமிழக அரசியலில் இது வரை இல்லாதபடி முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 9 மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். அடுத்த வாரம் பிரசாரம் விறு விறுப்படையும். வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்ட தொடங்கும் போது பிரசாரம் உச்சக்கட்டமாக இருக்கும்.

இது தவிர முக்கிய கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் இரண்டாவது வாரம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். 9 மாநகராட்சிகளிலும் அவர் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார். தி.மு.க. தலைவர் கருணாநிதி அக்டோபர் 2-வது வாரம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரி கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். சிறிய கட்சிகளும் ஆதரவு திரட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன. எனவே இன்னும் ஒரு வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விரிவாக செய்துள்ளது.

ஓட்டுச் சாவடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் ஒவ்வொரு தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு சுமார் 12 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கிராமப் பகுதிகளில் உள்ள வர்கள் 4 ஓட்டுக்களும், நகர்ப் பகுதிகளில் உள்ளவர்கள் 2 ஓட்டுக்களும் போட வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப வாக்குச் சாவடிகள், ஓட்டுப் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய நகரங்களில் ரோந்து பணிக்கு துணை நிலை ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21-ந் தேதி நடை பெறும். அதற்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Source & Thanks : maalaimalar

காவலர்கள் கூண்டோடு மாற்றம்: முதல்வர், டிஜிபியை சந்திக்கும் குடும்பத்தினர்
நெல்லை: நெல்லை மாநகரத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கூண்டோடு மாற்றப்பட்ட 20 காவலர்களின் குடும்பங்கள் தமிழக முதல்வர் மற்றும் டிஜிபியை சந்தித்து தங்களது இடமாற்ற உத்தரவை பரீசிலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கவிருக்கின்றனர்.

நெல்லை மாநகரத்திலிருந்து கடந்த மாதம் மாநகர ஆயுதப்படை காவலர் ராஜ்குமார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், மாநகர நுண்ணறிவு பிரிவு ஏட்டு குமரேசன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பாளை காவல் நிலையத்திலிருந்த பட்டன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், டவுன் காவல் நிலையத்திலிருநத ஏட்டு முத்தையா சிவகங்கை மாவட்டத்திற்கும், மாநகர குற்ற ஆவண காப்பக ஏட்டு சுப்பையா தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ்பால் மதுரை சரகத்திறகும், நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மதுரை சரகத்திற்கும், பாளை குற்றப்பிரிவு எஸ்ஐ கலைசெல்வன் குமரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர்.

இதேபோல் பாளை பெருமாள்புரம் எஸ்ஐ ராஜாமணி நெல்லை மாவட்டத்திற்கும், மாநகர ஆயுதப்படை எஸ்ஐ நடராஜன், ஏட்டு வெங்கடாசலபதி, காவலர்கள் ஜெசின்குமார், சுரேஷ், ரமேஷ் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைக்கும், மாநகர ஆயுதப்படை எஸ்ஐ சுந்தர்சிங் தேனி மாவட்ட ஆயுதப்படைக்கும், பேட்டை எஸ்ஐ ராஜன் நெல்லை சந்திப்பு குற்றபிரிவு ஏட்டு சண்முகம், நெல்லை சந்திப்பு காவல் நிலைய ஏட்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர். நெல்லை மாநகரத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள் சிலர் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டவர்கள் ஆவர். மற்றவர்கள் பணி புத்தகத்தில் எவ்வித குற்றசாட்டும் இல்லை. ஆனாலும் இவர்களும் திடீரென கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களின் குழந்தைகள் நெல்லையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வேறு மாவட்ட பள்ளிகளுக்கு உடனடியாக மாற்ற முடியவில்லை. மேலும் பலரின் வயதான பெற்றோரை பராமரிக்க முடியாமலும், குழந்தைகளின் படிப்பை கவனிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காவலர்கள் குடும்பத்தினர் முதல்வரையும், டிஜிபி ராமனுஜத்தையும் சந்தித்து தங்களது இடமாறுதல் உத்தரவை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.

Source & Thanks : thatstamil

அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி பங்கீடு இழுபறி நீடிப்பு ஏன்
சென்னை: ஒரு மாநகராட்சியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தே.மு.தி.க., -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், கொடுக்கிற தொகுதிகளை பெற்றுக் கொண்டு போட்டியிடுவதற்கு, கூட்டணிக் கட்சிகள் முன் வரவேண்டுமே தவிர பேரம் பேசக்கூடாது என்ற மனநிலையில் அ.தி.மு.க., இருப்பதால், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த 16ம் தேதி, கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தியது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, இன்னொரு பக்கம் அ.தி.மு.க., போட்டியிடும் மாநகராட்சிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக்கட்சி தலைவர்கள்,”வேட்பாளர்கள் பட்டியலை நிறுத்திவைக்க வேண்டும்’ என, வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து, 18ம் தேதி மீண்டும் அ.தி.மு.க., தொகுதிப் பங்கீடு குழுவினருடன், இரு கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் அவர்களிடம் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அ.தி.மு.க., வெளியிட்டது. இந்நிலையில், நேற்று கம்யூனிஸ்ட் – அ.தி.மு.க., பேச்சுவார்த்தை நடந்தது. கோவை அல்லது மதுரை ஆகிய இரண்டு மாநகராட்சியில் ஒன்றும், சிட்டிங் நகராட்சிகளான பழனி, கோவில்பட்டி, குழித்துறை போன்ற நகராட்சிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், ஒரு மாநகராட்சிகூட ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், சிட்டிங் நகராட்சிகளை ஒதுக்கீடு செய்யலாம் என அ.தி.மு.க., தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியாக கூறப்படுகிறது. மாநகராட்சியை கைப்பற்றுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதால் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறாமல் இழுபறி நீடிக்கிறது.

தே.மு.தி.க.,வை பொறுத்தவரை ஆரம்பக்கட்டத்தில் 40 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தும், அக்கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காமல் அ.தி.மு.க., புறக்கணித்தது. பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கமாட்டார்களா? என ஏங்கும் அளவிற்கு, தே.மு.தி.க., தள்ளப்பட்டது. தற்போது, 10 சதவீதம் ஒதுக்கினால் கூட போதும்; ஆனால், மதுரை அல்லது சேலம் ஆகிய இரண்டில் ஒரு மாநகராட்சியாவது ஒதுக்க வேண்டும் என தனது விருப்பத்தை தே.மு.தி.க., தெரிவித்துள்ளது. ஒரு மாநகராட்சி கூட ஒதுக்கமாட்டோம் என அ.தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி, பேரூராட்சிகளில் துணைத் தலைவர் பதவியாவது 90 சதவீதம் தே.மு.தி.க.,விற்கு தர வேண்டும் என்ற கோரிக்கைøயும் அக்கட்சி முன்வைத்தது. ஆனால், அதையும் ஏற்றுக் கொள்ள அ.தி.மு.க., முன்வரவில்லை.

இந்நிலையில், நாங்கள் தருகிற தொகுதிகளில் போட்டியிடுங்கள். இல்லையென்றால் நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை குறித்த விருப்ப கடிதத்தை நேற்று அ.தி.மு.க., விடம் வழங்கியுள்ளன.

இது குறித்து அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கோவில் பிரசாதத்தை கொடுக்கும் போது, அதை பவ்யமாக வாங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என முரண்டு பிடிக்கக் கூடாது. அதுபோல தான், கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிட முன் வரவேண்டுமே தவிர, எங்களிடம் பேரம் பேசக்கூடாது. அப்படி பேசிக்கொண்டிருந்தால் கூட்டணியில் இருந்து, அவர்களாகவே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source  &  Thanks :  dinamalar

மத்திய மந்திரி பதவியில் இருந்து ப.சிதம்பரத்தை நீக்கு: பிரதமர் மன்மோகனுக்கு ஜெயலலிதா கோரிக்கை
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

“அவர் உடனே பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையில் இருந்து அவரை, பிரதமர் நீக்க வேண்டும்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட்டில், சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்த போது, சிதம்பரத்தின் தொடர்பு பற்றிய கடிதம் ஒன்றை, சுப்பிரமணியசாமி தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 25ல், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் நிதித்துறை இணை இயக்குனர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமருக்கு எழுதியிருந்த கடிதம் அது. அதில், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்க, தொலைத்தொடர்புத் துறை பரிந்துரைத்தது. “ஆனால், அதை நிராகரித்து, 2001 விலையிலேயே, 2007ல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யலாம் என, நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதித்துள்ளார். ஏல முறையை அவர் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்காது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் வெளியானதும், தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமென, பா. ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. அதேநேரத்தில், இந்த கடிதம் குறித்து, எந்த பதிலையும் அளிக்க, பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார். இதனால், இந்த கடிதத்தை பிரணாப் எழுதியது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல, ப.சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து, நிருபர்களது கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அளித்த பதில்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகி உள்ளது. தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில், இந்த ஊழலால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, சிதம்பரம் உடனே அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை, உடனே மத்திய அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும். மேலும், ராஜாவுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுத்தது போல, சிதம்பரத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம், ராஜா மற்றும் கனிமொழிக்கு சாதகமாக அமையுமா என்பது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

“சி.பி.ஐ., விசாரணை தேவை’ பா.ஜ.,: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய விவகாரத்தில், ஏல முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என, சிதம்பரம் தெரிவித்ததால், தொலைத்தொடர்பு அமைச்சகம் ஏல முறையை கைவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டபடி, ஏல முறையை பின்பற்றியிருந்தால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடியே நடந்திருக்காது. எனவே, இந்தப் பிரச்னை குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டியது அவசியம். ஏல முறை தேவையில்லை என்ற ராஜாவின் கருத்துக்கு, சிதம்பரம் ஆதரவாக இருந்ததன் மூலம், அரசு கருவூலத்தின், 1.76 லட்சம் கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது’ என, பா.ஜ., தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.

மா.கம்யூ.,: கடந்த, 2008 ஜனவரியில், அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது தான், நுழைவுக்கட்டண விவகாரத்தை அல்லது வருவாய் பங்கீடு விவகாரத்தை மறு ஆய்வு செய்வதில்லை என, அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அருண் ஜெட்லி – ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்: “2ஜி’ விவகாரத்தில் சிதம்பரத்தின் பங்கு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு, அவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நிதியமைச்சகத்தின் கடிதத்திற்கு, மன்மோகன் சிங் அரசு பதிலளிக்க வேண்டும்.

முரளி மனோகர் ஜோஷி – பா.ஜ., மூத்த தலைவர்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையை அறிமுகப்படுத்தலாம் என, அப்போதைய நிதியமைச்சரான சிதம்பரத்திடம், அவரது அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்கே பல முரண்பாடுகள் நிகழ்ந்துள்ளது தெரிகிறது. சிதம்பரம் உடனே பதவி விலக வேண்டும் அல்லது அவரை உடனே பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் நீக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில் நாட்டிற்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை, தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முடிவு செய்து, அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Source   &  Thanks :  dinamalar

முதல்வர் ஜெயலலிதாவுடன் கூடங்குளம் போராட்டக் குழு, நாராயணசாமி சந்திப்பு
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை, கூடங்குளம் போராட்டக் குழுவினர் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக, டாகட்ர் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இக்குழுவில், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், கன்னியாகுமரி மறைமாவட்ட ஆயர் லியோன் கென்சன், இடிந்தகரை குருவானவர் ஜெயகுமார், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த லிட்வின், புஷ்பராயன், மைக்கேல், ஜோசப், வக்கீல் சிவசுப்பிரமணியன், ஞானசேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இன்று காலை அவர்கள் சாந்தோமிலிருந்து தலைமைச் செயலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

அப்போது தங்களது கருத்துக்கள், கோரிக்கைகளை அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். தமிழக சட்டசபையிலும், அமைச்சரவையிலும் அணு மின் நிலையத்தை மூடக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அவர்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உருதியளித்தார். இதையடுத்து போராட்டக் குழுவினர் விடை பெற்றுச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் நாராயணசாமி முதல்வரை சந்தித்தார். அவரிடம், கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்தும், போராடட்ம் குறித்தும் நாராயணசாமி விவாதித்தார். இடிந்தகரை சென்று வந்தது குறித்தும் விளக்கினார். பின்னர் ஜெயலலிதா கூறியதைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வெளியில் வந்த அவர் கூறுகையில், முதல்வருடன் விவாதித்தது குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பேன். இந்த விவகாரத்தில் பிரதமர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

கூடங்குளம் மக்களின் மன நிலை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினேன். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கும் பிரதமரிடம் அனுமதி பெற்று விட்டுச் செல்வேன் என்றார் நாராயணசாமி.

Source  &  Thanks :  thatstamil

10 மாநகராட்சி மேயர் பதவிகளும் அ.தி.மு.க.,விற்கே: வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை : தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி, கோவையில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மதுரையில் முன்னாள் எம்.பி., ராஜன் செல்லப்பா ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, பின் மாற்றப்பட்ட சிலருக்கும் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாததால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய எட்டு மாநகராட்சிகள் தி.மு.க.,விடமும், திருச்சி, கோவை மாநகராட்சிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

அ.தி.மு.க.,வில் 10 மாநகராட்சிகளிலும் அக்கட்சியே போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடப்பங்கீடு குழு ஒன்றையும் அ.தி.மு.க., அறிவித்திருந்தது. அக்குழு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளிடம் துவங்கும் முன், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை பங்கீடு மட்டும் முடித்துக் கொண்டு, எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதை முடிவு செய்யாமல், தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.பின், கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு நடத்தி, சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து, 160 தொகுதிகளில் போட்டியிட்டது. சட்டசபைத் தேர்தல் பார்முலா அடிப்படையில், 10 மேயர் பதவிக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள செ.ம.வேலுசாமி, ராஜன் செல்லப்பா, திருப்பூர் விசாலாட்சி, சசிகலா புஷ்பா ஆகியோருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பின் அவர்களின் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இப்படி சட்டசபைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட்டும், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு, குறைந்த ஓட்டுகளில் தோல்வியடைந்த சைதை துரைசாமி, சென்னை மாநகர மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெண் வேட்பாளர்களில் சிலர் கட்சிக்கு புதியவர்களாக இருந்தாலும், அவர்களின் குடும்பத்தினர் அ.தி.மு.க.,வினர் என்ற அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாததால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க., குழுவினர் தே.மு.தி.க., குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், வேலூர், திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இரண்டு மாநகராட்சிகள் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தான், அந்த மூன்று மாநகராட்சிகளுக்கும் பிரபலம் இல்லாத டம்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source  &  Thanks :  dinamalar

மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது
திருவள்ளூர்:பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ – மாணவியருக்கு மடிக்கணினிகள் (லேப்-டாப்), கிராமப்புற ஏழை, எளியோருக்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் துவக்கி வைத்தார்.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து மக்களுக்கும், இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் மடிக்கணினிகளும், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு, இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள், செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாளன்று துவக்கி வைக்கப்படும் என, அறிவித்தார்.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 103வது பிறந்தநாளான நேற்று, அரசின் இந்த இலவச திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திட்டம்: நடப்பாண்டில், 912 கோடி ரூபாய் செலவில், 9 லட்சத்து, 12 ஆயிரம் மடிக்கணினிகளும், 1,250 கோடி ரூபாய் செலவில், 25 லட்சம் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர், 56 கோடி ரூபாய் செலவில், 12 ஆயிரம் குடும்பங்களுக்கு, கலப்பின ஜெர்சி கறவை மாடுகளும், 135 கோடி ரூபாய் செலவில், முதல்கட்டமாக, 1 லட்சம் குடும்பங்களுக்கு, தலா, நான்கு ஆடுகள் வழங்கப்படும்.திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில், பயனாளிகள், தலா ஏழு பேருக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி, கறவை மாடுகள், ஆடுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ரமணா முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஜெயக்குமார், விழாவுக்கு தலைமை ஏற்றார்.நிதியமைச்சர் பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சிவபதி, தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

திக்குமுக்காடியது திருவள்ளூர் நகரம் : இலவச திட்டத்தை துவக்கி வைக்க, திருவள்ளூரில் உள்ள காக்களூர் தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா, காலை, 10.42 மணிக்கு வந்தார். அருகில் உள்ள விழா மேடைக்கு, 10.47 மணிக்கு காரில் வந்தார்.

அங்கிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து முதல்வர் கையசைத்ததும், தொண்டர்கள் மகிழ்ச்சி பொங்க உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து, அரசு நலத் திட்டங்களை வழங்கி பேசிவிட்டு, 12.35 மணிக்கு மேடையை விட்டு இறங்கினார். தொண்டர்களை பார்த்து கையசைத்துவிட்டு, 12.42 மணிக்கு, ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டார்.

* முதல்வரின் வருகையையொட்டி, வீரராகவ பெருமாள் கோவில் தேரடியில் இருந்து, காக்களூர் வரை, 3 கி.மீ., தூரத்துக்கு, சாலையின் ஒருபுறம், மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்களை கட்சியினர் வைத்திருந்தனர்.

* எட்டு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 2,700 போலீசார், பணியில் ஈடுபட்டிருந்தனர்.

* தேரடி- காக்களூர் வரை, குடிநீர் பாக்கெட்டுகள், மோர், டீ, காபி, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சுண்டல், வேர்க்கடலை ஆகிய திடீர் தின்பண்ட கடைகள் ஏராளமாக முளைத்தன. இக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்திருந்தது.

* மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், அனைவரும் முதல்வரின் பேச்சைக் கேட்கும் வகையில், ஆங்காங்கே, டிஜிட்டல் ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டிருந்தன.

* விழா மேடை அமைந்துள்ள இடத்தில் இருந்து, இருபுறமும், 2 கி.மீ., தூரத்துக்கு மக்கள் கூட்டம் இருந்தது.

* முதல்வரின் வருகையையொட்டி, மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து, திருவள்ளூருக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Source  &  Thanks :  dinamalar